Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகா கும்பமேளா உயிரிழப்பு 30 ஆக உயர்வு! தனிப்படை அமைத்து விசாரணை!

Prasanth Karthick
புதன், 29 ஜனவரி 2025 (19:04 IST)

உத்தர பிரதேசத்தில் மகா கும்பமேளாவில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது.

 

உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் கும்பமேளா வைபவத்தில் பங்கேற்க லட்சக்கணக்கான மக்கள் செல்வதால் பெரும் கூட்ட நெரிசலாக காணப்படுகிறது. இன்று அமாவாசை என்பதால் திரிவேணி சங்கமத்தில் நீராட ஏராளமான பக்தர்கள் நேற்று இரவே குவிந்ததால் பெரும் நெரிசல் ஏற்பட்டது.

 

அதிகாலை 1 - 2 மணியளவில் ஏற்பட்ட திடீர் கூட்ட நெரிசலில் பக்தர்கள் முண்டியடித்து பிறரை மிதித்து ஓடியதில் நெரிசலில் சிக்கி கீழே விழுந்து 15 பேர் பரிதாபமாக பலியானார்கள். மேலும் 200க்கும் மேற்பட்டோர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் அதில் மேலும் 15 பேர் இறந்ததால் உயிரிழப்பு எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது. இதை உத்தர பிரதேச காவல்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 

வரும் பக்தர்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு முறையான வழிகாட்டு நெறிமுறைகள் செய்யப்படாததே கூட்ட நெரிசலுக்கு காரணம் என சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகள் ஆளும் பாஜக அரசை கண்டித்து வருகின்றன. இந்நிலையில் கூட்ட நெரிசலுக்கான காரணம் குறித்து விசாரிக்க உத்தர பிரதேச போலீஸார் 2 தனிப்படைகளை அமைத்துள்ளனர்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடி வீட்டில் அவசர ஆலோசனை.. அமித்ஷா, ராஜ்நாத் சிங் விரைவு..!

பொன்முடி சர்ச்சை பேச்சு: தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்க ஐகோர்ட் நீதிபதி உத்தரவு..!

பயங்கரவாதிகளை தப்ப விடமாட்டோம்; காஷ்மீரில் ஆய்வுக்கு பின் அமித்ஷா உறுதி..!

பெஹல்காம் சுற்றுலா சென்ற 35 தமிழர்கள்.. சென்னை திரும்புவது எப்போது?

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு காரணமான மூன்று பயங்கரவாதிகள் ஸ்கெட்ச் வெளியீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments