மத்திய பிரதேசத்தில் மாணவர்களை கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்தது குறித்து பேசிய மாவட்ட ஆட்சியர் “அதில் எந்த தவறும் இல்லையே!” என பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் கந்துவா மாவட்டத்தை சேர்ந்த கிராமம் ஒன்றில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு படிக்கும் மாணவர்களை பள்ளி நிர்வாகமே கழிவறையை சுத்தம் செய்ய உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.
சிலநாட்கள் முன்பு மாணவர்கள் சிலர் கழிவறைகளை சுத்தம் செய்யும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. படிக்க பள்ளிக்கு சென்ற குழந்தைகளை கழிப்பறையை சுத்தம் செய்ய நிர்பந்தித்தது தவறு என பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுகுறித்து பேசிய கந்துவா ஆட்சியர் “மாணவர்களுக்கு தூய்மை குறித்த செயல்முறை கல்வி அளிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே கழிவறை சுத்தம் செய்யும் பணியும் வழங்கப்பட்டது. இது ஒன்றும் தவறான விஷயம் அல்ல” என்று கூறியுள்ளார்.
செயல்முறை கல்வி என்றாலும் தனியார் பள்ளிகளில் இதுபோன்ற செயல்முறைகளை செய்யாது ஏழை மாணவர்கள் படிக்கும் பள்ளியில் இதை செய்தது ஏன் என்று பலர் இதை விமர்சித்துள்ளனர்.