Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மின் தடையால் மாறிப் போன மாப்பிள்ளைகள்! – மத்திய பிரதேசத்தில் நடத்த கலாட்டா கல்யாணம்!

Advertiesment
மின் தடையால் மாறிப் போன மாப்பிள்ளைகள்! – மத்திய பிரதேசத்தில் நடத்த கலாட்டா கல்யாணம்!
, செவ்வாய், 10 மே 2022 (14:02 IST)
மத்திய பிரதேசத்தில் திருமணத்தின்போது ஏற்பட்ட மின்வெட்டால் மாப்பிள்ளைகள் மாறிப்போன சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜனி பகுதியில் உள்ள அஸ்லானா கிராமத்தில் வசித்து வரும் மூன்று சகோதரிகளுக்கு ஒரே நாளில் திருமணம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மண்டபம் ஏற்பாடு செய்து விமர்சையாக நிகழ்ச்சிகள் நடந்துள்ளது.

மூன்று மணமகள்களும், மணமகன்களும் அலங்காரத்தோடு தயாரானார்கள். திருமணத்திற்கு முன்பாக நடக்கும் சடங்கு நிகழ்ச்சிகளின்போது மின்தடை ஏற்பட்டுள்ளது. ஜெனரேட்டர் வசதியும் இல்லாததால் அனைவரும் சிக்கி தவித்த நிலையில் ஒரு பக்கம் சடங்குகளும் நடந்து வந்துள்ளது.

மின்சாரம் வந்ததும் மணமக்களை பார்த்த உறவினர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதில் இரண்டு மாப்பிள்ளைகள் தங்களுக்கு நிச்சயிக்கப்பட்ட சகோதரிகளில் வேறுவேறு நபர்களுடன் சடங்கை செய்துள்ளனர். பின்னர் அவர்களை மீண்டும் சரியான ஜோடிகளுடன் நிறுத்தி திருமணத்தை நடத்தி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மிருகத்தை விட மோசமானவர்: 49 வயது அரசியல்வாதியை விவாகரத்து செய்த 18 வயது மனைவி!