இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்கள் ஆகஸ்ட் மாதம் முதல் சந்தைக்கு விற்பனைக்கு வர இருக்கின்றன.
உலகம் முழுவதும் ஸ்மார்ட் போன் விற்பனையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களும் குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. ஆனால் ஐபோன்களின் அதிக விலை, சிக்கலானப் பயன்அடுத்தும் முறை ஆகியவற்றால் அது வசதியானவர்கள் மட்டுமே பயன்படுத்தக் கூடிய போனாக இருந்து வருகிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை ஸ்மார்ட்போம் விற்பனையில் சீன ஸ்மார்ட்போன்களே அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன. இதனையடுத்து மிகப்பெரிய சந்தையுள்ள இந்தியாவில் தங்களை வலுப்படுத்திக்கொள்ள ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி ஆலைகளை அமைத்துள்ளது.
இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட்ட ஐபோன் எக்ஸ் ஆர் மற்றும் ஐபோன் எக்ஸ் எஸ் ஆகிய ஐபோன்கள் ஆகஸ்ட் மாதத்தில் இந்தியச் சந்தைகளில் விற்பனை செய்யப்படும் என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவிலேயே தயாரித்துள்ளதால் இதன் விலைக் கம்மியாக இருக்கும் எனத் தெரிகிறது.