கடந்த சனிக்கிழமை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு என்ற கேலிக்கூத்தை தமிழகத்தில் உள்ள பெரும்பாலானோர் கண்டித்து வருகின்றனர். குறிப்பாக திமுக இந்த விஷயத்தை எளிதில் விட்டுவிடுவதாக இல்லை.
சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றியது குறித்து ஏற்கனவே கவர்னரிடம் மனு கொடுத்த எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தற்போது ஜனாதிபதியை சந்திக்க அனுமதி கேட்டிருந்தார்.
இந்நிலையில் அவருக்கு வரும் 23ஆம் தேதி சந்திக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. மு.க. ஸ்டாலினுடன் தி.மு.க. முக்கிய தலைவர்களும் ஜனாதிபதியை சந்திக்க உள்ளதாகவும் ஜனாதிபதி மாளிகை வட்டாரம் தெரிவித்துள்ளது.