Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இனி மொபைல் போனில் ஆதார்....எப்படி தெரியுமா?

இனி மொபைல் போனில் ஆதார்....எப்படி தெரியுமா?
, புதன், 19 ஜூலை 2017 (18:28 IST)
டிஜிட்டல் இந்தியாவின் திட்டத்தில் எம்-ஆதார் என்ற செயலியை இந்திய தனிநபர் அடையாள ஆணையம் வெளியிட்டுள்ளது.
 

 



டிஜிட்டல் இந்தியாவின் திட்டத்தின் கீழ் அனைத்தையும் இணையதளம் மூலம் செயல்படும் விதமாக அறிமுகப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் தற்போது எம்.ஆதார் என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளனர். இதை இந்திய தனிநபர் அடையாள ஆணையம் வெளியிட்டுள்ளது.
 
இதன்மூலம் இனி அசல் ஆதார்  கார்டினை அல்லது நகலினை எப்போதும் கையில் எடுத்துச் செல்ல தேவையில்லை. டிஜிட்டல் முறையிலான இந்த செயலி மூலம் ஆதார் கார்டு விவரங்களை பெற உதவும். இந்த செயலி தற்போது ஆண்டிராய்டு பயனாளர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
 
மேலும் இந்த செயலியின் பீட்டா வெர்ஷன் தான் வெளியாகியுள்ளது. அதனால் இந்த செயலியின் முழு பயன்பாடு குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காலை நீட்டிப்படுக்க கைதியிடம் ரூ.100 லஞ்சம் - அக்ரஹார சிறையில் கொடுமை