வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒடிசா அருகே கரையை கடந்துள்ளதாக தகவல் வழியாக உள்ளன.
வங்கக்கடலில் வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று முன்தினம் உருவாகிய நிலையில் நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது மேலும் வடக்கு திசையில் நகர்ந்து வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்காள கடற்கரை இடையே கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் ஒடிசா மாநிலத்தின் புரி மற்றும் சத்தீஸ்கர் இடையே இன்று கரையை கடந்ததாக சற்றுமுன் செய்தி வெளியாகி உள்ளது. கரையை கடக்கும் நேரத்தில் புவனேஸ்வர் மற்றும் புகழ்பெற்ற பூரி ஜெகநாதர் ஆலயம் வெள்ளக்காடாய் மாறி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் காற்றழுத்த தாழு மண்டலம் கரையை கடந்தாலும் 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீச கூடும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.