Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குறைந்த விலையில் பிராட்பேண்ட் சேவை…தனியாருக்குப் போட்டியாகும் அரசு

குறைந்த விலையில் பிராட்பேண்ட் சேவை…தனியாருக்குப் போட்டியாகும் அரசு
, வியாழன், 8 ஜூன் 2023 (19:31 IST)
கேரள மாநிலத்தை அறிவுசார் பொருளாதாரமாக மாற்றுவதற்காக  புதுமை சார்ந்த சமூகத்தை உருவாக்கும் நோக்கில  தனியாருக்குப் போட்டியாக பிராட்பேண்ட் இணையதளத்தை துவங்கியுள்ளது.

கேரளா மாநிலத்தில் முதல்வர்  பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறாது.  இங்கு தனியார் நிறுவனங்களுக்குப் போட்டியாக பிராட்பேண்ட் இணையதள சேவை ஒன்றை மாநில அரசு  நேற்று முன்தினம் துவங்கியது.

கேபான் – கேரளா பைபர் ஆப்டிக் நெட்வொர்க் என்று பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தை முதல்வர் பினராயி விஜயன் துவக்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

‘’இத்திட்டம் கேரள மாநிலத்தை அறிவுசார் பொருளாதாரமாக மாற்றுவதற்காக  புதுமை சார்ந்த சமூகத்தை உருவாக்கும் நோக்கில்   தனியாருக்குப் போட்டியாக பிராட்பேண்ட் இணையதளத்தை துவங்கப்பட்டுள்ளது.

மேலும், அடந்த வனப்பகுதியிலும் பிராட்பேண்ட் சேவை அனைவருக்கும் கிடக்கும் வகையிலும், தனியார் நிறுவனங்களின் சுரண்டலில் இருந்து மக்களை விடுவிக்கும் நோக்கில் இது தொடங்கப்பட்டுள்ளது’’ என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்தில் மாநிலத்தில் 20 லட்சம் ஏழைகள் இலவசமாக இணையதள சேவை வழங்கப்படும். மாதம் ரூ.299 க்கு 20 எம்.பி.பி.எஸ், 3000 ஜிபி வரை இலவசமாக டவுண்லோட் செய்யலாம் என்று தெரிவிகப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்காக மாநிலம் முழுவதும்  ரூ.1249 க்கு 250 எம்பிபிஎஸ் வேகத்தில் 5000 ஜிபிவரை இலசமாக டவுண்லோட் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆவின் நிறுவனத்தில் சிறார்களை பணியமர்த்திய விவகாரம்: அண்ணாமலை அதிர்ச்சி..!