இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே போகிறது. 5 மாநிலத் தேர்தலை கணக்கில் கொண்டு கடந்த சில நாட்களாகத்தான் பெட்ரோல் டீசல் விலை உயரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து ஏப்ரல் ஐந்தாம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
து குறித்து லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சங்கத்தின் தலைவர் சென்னா ரெட்டி என்பவர் பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசியபோது 15 ஆண்டுகள் இயங்கிய வாகனங்களை இயக்க கூடாது என்ற திட்டம் கைவிடப்பட வேண்டும் என்றும் காப்பீட்டு தொகையை ஆயிரத்து 750 ரூபாயிலிருந்து 40 ரூபாயாக உயர்த்தி அதை ரத்து செய்ய வேண்டும் என்றும் பெட்ரோல் டீசல் விலையை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்றும் இந்த கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றாவிட்டால் ஏப்ரல் 5 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடைபெறும் என்றும் குறிப்பிட்டுள்ளார்