எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக 2 வது நாளாக இன்றும் இரு அவைகளும் பிற்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசின் மக்களவை மற்றும் மாநிலங்களை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. புதிய அமைச்சர்கள் பதவியேற்பிற்கு பிறகு கூட்டப்படும் கூட்டத்தொடர் என்பதால் பிரதமர் மோடி அமைச்சர்கள் பட்டியல் அறிக்கையை வாசிக்க இருந்தார்.
இந்நிலையில் செல்போன் தகவல் திருட்டு விவகாரம் உள்ளிட்டவற்றை குறித்து அமளி எழுப்பிய எதிர்கட்சிகள் பிரதமர் மோடியை பேச விடாமல் குறுக்கீடு செய்ததால் பரபரப்பு எழுந்துள்ளது. இதனால் மதியம் வரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது.
மீண்டும் அவை தொடங்கிய நிலையில் செல்போன் வழியாக உளவு பார்த்ததாக வெளியான தகவல் உண்மையில்லை என விளக்கமளித்தும் தொடர் அமளி ஏற்பட்டது. எதிர்கட்சிகள் அவை தலைவர் அருகே சென்று தொடர்ந்து முழக்கங்களை எழுப்பியதால் இன்று காலை 11 மணி வரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக 2 வது நாளாக இரு அவைகளும் பிற்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மக்களவை பிற்பகல் 2 மணி வரையும், மாநிலங்களவை நண்பகல் 12 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.