2016-17 மத்திய ரயில்வே பட்ஜெட்டை ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அப்போது அவர் அறிவித்த சில முக்கிய அறிவிப்புகள் பின்வருமாறு:
வதோதராவில் உள்ள ரயில்வே அகாடமி பல்கலைகழகமாக மாற்றப்படும்.
முழுவதும் முன்பதிவு செய்யாத ரயில்கள் சாமானிய மக்களுக்காக இயக்கப்படும்.
நடப்பாண்டில் 311 ரயில் நிலையங்களில் கண்கானிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
ரயில்வே பணிகளுக்கான ஒப்பந்த புள்ளிகள் கோருவது இணையம் வழியாக மேற்கொள்ளப்படும்.
ரயில்வே திட்டங்களை நிறைவேற்ற 6 மாநிலங்களுடன் ஒப்பந்தம் செய்யப்படும்.
100 ரயில் ரயில் நிலையங்களில் வை-ஃபை வசதி செய்யப்படும்.
என்று அறிவித்தார். மேலும் எங்களது முயற்சிகள் அனைத்தும் எப்போதுமே பொதுமக்களுக்காவே இருந்து வந்துள்ளது என்றும் நடப்பாண்டில் விபத்துக்களின் எண்ணிக்கை 20 சதவீதம் குறைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.