Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மதுபான உரிமை முறைகேடு - கெஜ்ரிவால் முக்கிய குற்றவாளி - மத்திய அமைச்சர் தாக்கூர்

thakur
, சனி, 20 ஆகஸ்ட் 2022 (16:02 IST)
மதுபான உரிமை வழங்குவது தொடர்பான முறைகேட்டில் கெஜ்ரரிவால்தான் முக்கிய குற்றவாளி என  மத்திய அமைச்சர் தாகூர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் முதலமைச்சராக அரவிந்த் கேஜரிவால் இருந்துவரும் நிலையில் துணை முதலமைச்சராக மனிஷ் சிசோடியா செயல்பட்டு வருகிறார்.

இந்த நிலையில் துணை முதலமைச்சர் மனிஷ் சிசோடியா வீட்டில்  நேற்று காலை திடீரென சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்தனர்.

மதுபானம் உரிமை வழங்குவதில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்த புகாரின் அடிப்படையில்  மணிஸ் சிசோடியாவுக்குச் சொந்தமான 10க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதில், மிக முக்கிய ஆவணங்கள்  கைப்பற்றியதாகவும், இது சம்பந்தமாக 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எனவே முதல் குற்றவாளியாக சிசோடியா உள்ளதாக கூறப்படுகிறது.

இதுபற்றி கூறிய மணி சிசோடியா, முதல்வர் கெஜ்ரிவாலை கண்டு பயன்படுவதால் மத்திய பாஜக அரசு  சிபியை மூலம் சோதனை நடத்தி வருவதாகத் தெரிவித்தார்.

இதற்குப் பதிலடி தரும் வகையில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், மதுபான மோடியில் முதல் குற்றவாளியாகப் மணீஸ் சிசோடியாவின்  பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.  

ஆனால்,  முக்கியமான குற்றவாளி கெஜ்ரிவால், இந்த மோசடியில் அவரது உண்மை முகம் வெளியாகியுள்ளது என்றும்  இதுபற்றி அடுத்த 24 மணி  நேரத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டுமென  கெஜ்ரிவாலுக்கு  சவால் விடுத்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புதிய விமான நிலையம் அமைக்காவிட்டால் சென்னையின் வளர்ச்சி தேக்கமடையும்: அமைச்சர் தங்கம் தென்னரசு