ஓரினச் சேர்க்கை மோகம்; திருமணம் செய்த இரு பெண்கள்: கதறும் குடும்பம்!
ஓரினச் சேர்க்கை மோகம்; திருமணம் செய்த இரு பெண்கள்: கதறும் குடும்பம்!
கர்நாடக மாநிலத்தில் தூரத்து உறவினர்களான இரு ஓரினச் சேர்க்கை பெண்கள் காதலித்து திருமணம் செய்துள்ளனர். ஆனால் அவரது பெற்றோர்கள் இதனை எதிர்த்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
உலகம் முழுவதும் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு அனுமதி கிடைத்தாலும், இந்தியா போன்ற சில நாடுகள் அதனை ஏற்க இன்னமும் தயாராகவில்லை. இந்தியாவில் மட்டும் தான் ஓரினச் சேர்க்கையாளர்களை தண்டிக்க சட்டமே இருக்கிறது. இந்தியாவில் ஓரினச் சேர்க்கை என்பது குற்றச்செயல்.
இந்நிலையில் கர்நாடகாவில் பெங்களூரை சேர்ந்த இரு ஓரினச் சேர்க்கை பெண்கள் கோவில் ஒன்றில் திருமணம் செய்துள்ளனர். ஷில்ப்பா, ஷானா என்னும் இவர்கள் இருவரும் தூரத்து உறவினர்கள்.
சஹானா ஆந்திராவில் உள்ள ஒரு கிராமத்தில் கட்டுக்கோப்பான குடும்பத்தை சேர்ந்தவர். இவர் படிப்பதற்காக பெங்களூர் வந்துள்ளார். அப்போது ஷில்ப்பாவின் வீடு சஹானாவுக்கு தூரத்து சொந்தம் என்பதால் ஹில்ப்பாவும் சஹானாவும் அடிக்கடி சந்திக்க நேர்ந்தது.
கிராமத்து பெண்ணாக இருந்த சஹானாவை ஷில்ப்பா மார்டன் பெண்ணாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டார். ஹில்ப்பாவின் அக்கறை காதலாக மாற இருவரும் காதலிக்க ஆரம்பித்தனர். மூன்று வருடம் காதலித்து வந்த இவர்கள் தற்போது ஒருவரையொருவர் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.
இதற்கு இரு வீட்டாரும் சம்மதிக்கவில்லை. இவர்களை பிரிக்க கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதற்கு சாதகமாக உள்ள இந்திய சட்டத்தையும் பயன்படுத்தி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் இரு பெண்களும் பெற்றோருடன் செல்ல மாட்டோம் என பிடிவாதமாக உள்ளனர்.