Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விமான நிலையத்தில் புகுந்த சிறுத்தை… 10 மணி நேர போராட்டத்தில் வனத்துறையினர்!

Advertiesment
விமான நிலையத்தில் புகுந்த சிறுத்தை… 10 மணி நேர போராட்டத்தில் வனத்துறையினர்!
, வியாழன், 3 டிசம்பர் 2020 (10:37 IST)
உத்தரகாண்ட் விமான நிலையத்தில் ஒரு வயதுள்ள பெண் சிறுத்தை ஒன்று புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உத்தரகண்ட் மாநிலத்தில் டேராடூன் ஜாலிகிராண்ட் பகுதியில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. அங்கு வனத்தில் இருந்து தப்பி வந்த பெண் சிறுத்தை ஒன்று புகுந்துள்ளது. விமானங்களின் இரைச்சலால் மிரண்ட அந்த சிறுத்தை கட்டுமானப்பணிகள் நடந்து கொண்டிருந்த பகுதிகளில் சென்று பதுங்கியது. சிறுத்தை தப்பி வந்தது குறித்து வனத்துறையினருக்கு தகவல் சொல்லப்பட்ட நிலையில் அங்கு வந்த அவர்கள் 10 மணி நேரப்போராட்டத்துக்கு பின் அந்த சிறுத்தையை பிடித்து காட்டுப்பகுதியில் விட்டுள்ளனர். உணவு மற்றும் தண்ணீருக்காக சிறுத்தை வழிதவறி இங்கு வந்திருக்கலாம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்னும் சில நாளில் திருமணம்… தூக்கில் தொங்கிய கல்யாண பெண் – இதுதான் காரணமா?