Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காங்கிரஸ் கட்சியிலிருந்து ’முக்கிய தலைவர் ’ சஸ்பெண்ட் : அரசியலில் பரபரப்பு

Advertiesment
காங்கிரஸ் கட்சியிலிருந்து ’முக்கிய தலைவர் ’ சஸ்பெண்ட் : அரசியலில் பரபரப்பு
, வியாழன், 27 ஜூன் 2019 (14:10 IST)
சமீபத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இதனால் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் கடும் ஏமாற்றம் அடைந்தனர். முக்கியமாக அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தன் பதவியை ராஜினாமா செய்யப் போவதாகக் கூறிவருகிறார். இதற்கு கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலர் பாஜகவில் இணைந்து வருகின்ற நிலையில், தற்போது சென்னை தென்மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜனை கட்சி மேலிடம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.

இப்படியிருக்க, தமிழக காங்கிரஸ் கட்சியில் எப்போதும் உள்கட்சி மோதல் என்பது பொதுவாக அனைவரும் அறிந்ததுதான். இந்நிலையில் வரும் தமிழக உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடவேண்டும் என அக்கட்சியின் தென் சென்னை மாவட்ட தலைவராக இருந்த கராத்தே தியாகராஜன் கூறியிருந்தார்.
 
இதனைதொடர்ந்து திமுக கட்சியின் கே.என்.நேருவும் திமுகவும் தனித்து போட்டியிட வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இவர்கள் இருவரின் கருத்தால் காங்கிரஸ் - திமுக கூட்டணிக்குள் சச்சரவு ஏற்பட்டது
 
இந்நிலையில் காங்கிரஸ் கட்சி மேலிடம், கராத்தே தியாகராஜனை தற்போது சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.
 
நேற்று கேரளாவைச் சேர்ந்த முக்கிய காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காதலியை கைப்பிடிக்க அல்பமாய் கடிகாரத்தை திருடிய காதலன்!