பெட்ரோல் பங்க்குகளில் நாளை முதல் பழைய 500,1000 ரூபாய் நோட்டுகள் வாங்கப்படமாட்டாது
கடந்த 8 ம் தேதி முதல் பழைய 500,1000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெற்றுக் கொள்ளப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. அதனைத் தொடர்ந்து அத்தியவசிய பொருட்கள் வாங்க மட்டும் குறிப்பிட்ட தேதியை மத்திய அரசு அறிவித்தது. அதன் படி பெட்ரோல் பங்குகளில் 24 ம் தேதி வரை பழைய 500,1000 ரூபாய் நோட்டுகள் வாங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. இதனால் வரும் நாட்களில் வங்கி கணக்குகளில் மட்டுமே பழைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய முடியும் என்று வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதேபோன்று பழைய ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி மின்சாரம் மற்றும் சொத்துவரி செலுத்தவும் இன்று கடைசி நாளாகும். பெட்ரோல் பங்க்குகளிலும் இன்று கடைசி நாள் என்பதால் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் சிக்கல் அதிகரித்துள்ளது.