Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரதான சாலையில் தரையிறங்கிய விமானம் ! வைரல் தகவல்

Advertiesment
பிரதான சாலையில் தரையிறங்கிய விமானம் ! வைரல் தகவல்
, சனி, 3 ஆகஸ்ட் 2019 (14:31 IST)
அமெரிக்காவின் தேசிய தேடுஞ்சாலையில் ஒரு சிறிய ரக விமானம் தரையிறங்கியது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அமெரிக்க நாட்டில் வாஷிங்டன்  நகரில் 7 ஆம் எண் சாலையில் உள்ள டகோமா அருகே, பிரதான சாலையில் அந்த சிறிய ரக விமானம் ஒன்று தரையிறகப்பட்டது. இந்தக் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.
 
அந்த சிசிடிவி கேமராவில், சாலை ஒன்றுக்கு மேலே ஒரு சிறிய ரக விமானம் பறந்து வருகிறது. பின்னர் தனது வேகத்தைக் குறைத்தபடி வந்து அங்கு சிக்னல் எரிகின்ற இடத்தில் வானகத்துடன் ஒன்றாக நின்றுகொண்டது.
 
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போக்குவரத்து காவலர்கள், விமானத்தை அப்புறப்படுத்தினர். மேலும் எரிவாயு அமைப்பில் ஏற்பட்ட கோளாறின் காரணத்தால் அந்த விமானம் அ அவசரமான சாலையில் தரையிறக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
 
விமானம் பறந்த போது , விமானி தரையிறக்க அனுமதி கேட்டதனால்தான், சாலையில் விமானம் தரையிறக்கப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இச்சமவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புதுக்கணவன் தொல்லை - தற்கொலை செய்துகொண்ட 4 மாத கர்ப்பிணி!