Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலீஸ் ஸ்டேஷனுக்குள் ஆட்டம் போட்ட பெண் போலீஸ்: சஸ்பெண்ட் ஆனதால் பரபரப்பு

Webdunia
வியாழன், 12 மார்ச் 2020 (09:15 IST)
போலீஸ் ஸ்டேஷனுக்குள் ஆட்டம் போட்ட பெண் போலீஸ்
உலகில் மிக வேகமாக பரவி வரும் செயலிகளில் ஒன்று டிக்டாக். இந்த டிக்டாக் செயலி உலகம் முழுவதும் குறிப்பாக இந்தியாவில் இளம் பெண்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது என்பதும் பலர் இந்த டிக்டாக் செயலிக்கு அடிமையாகி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே இந்தியாவில் டிக்டாக்கை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
 
இந்த நிலையில் குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஆர்பிதா சவுத்ரி என்ற பெண் போலீஸ், போலீஸ் நிலையத்தில் சினிமா பாடல் ஒன்றுக்கு டான்ஸ் ஆடி எடுத்த வீடியோவை டிக்டாக் செயலி பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவை டிக்டாக்கில் லட்சக்கணக்கானவர்கள் லைக்ஸ் செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் காவல் துறை மேலதிகாரிகள் பெண் போலீஸ் ஆர்பிதா சவுத்ரி மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுத்துள்ளனர் 
 
ஆர்பிதா சவுத்ரி சஸ்பெண்ட் செய்யப்பட்ட போதிலும் அவர் அதை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து வீடியோக்களை பதிவு செய்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் அவர் டிக்டாக்கில் மிகவும் பிரபலம் ஆகி விட்டதால் அவர் தனி மியூசிக் ஆல்பம் போடும் திட்டம் ஒன்றை வைத்துள்ளதாகவும் சஸ்பெண்ட் பற்றி கவலைப்படாமல் அவர் தொடர்ந்து வீடியோக்களை பதிவு செய்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments