வாக்களிக்க லஞ்சம் கொடுத்த பெண் எம்பிக்கு ஜெயில்: முதல்முறையாக தண்டனை!
தேர்தலில் வாக்களிக்க லஞ்சம் கொடுத்த குற்றத்திற்காக முதல் முறையாக எம்பி ஒருவருக்கு ஆறு மாத காலம் சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி வேட்பாளராக மகாபூபாத் என்ற தொகுதியில் போட்டியிட்டவர் மலோத் கவிதா. இவர் தனக்கு வாக்களிக்க வேண்டும் என்பதற்காக வாக்காளர்களுக்கு ரூபாய் 500 பணம் கொடுத்ததாக பறக்கும் படையினர்களிடம் பிடிபட்டார்
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் விசாரணை நடந்த நிலையில் இந்த விசாரணையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததை எம்பி ஒப்புக்கொண்டார். இதனையடுத்து அவருக்கு 6 மாத காலம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது இந்தியாவில் முதல் முறையாக வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததற்காக சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது