Publish Date: Tue, 30 May 2017 (17:23 IST)
Updated Date: Tue, 30 May 2017 (17:59 IST)
உத்தரபிரதேச மாநிலம் பெண்கள் மற்றும் குடும்பம் நல மேம்பாட்டுத்துறை அமைச்சர் சுவாதி சிங் புதிய பீர் பார் ஒன்றை திறந்து வைத்துள்ளார்.
நாடு முழுவதும் மது கடைக்கு எதிராக பிரச்சாரம் அதிகரித்து கொண்டிருக்கிறது. இதை பெண்கள்தான் அதிக அளவில் முன்நின்று நடத்தி வருகின்றனர். இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தின் பெண்கள் மற்றும் குடும்பம் நல மேம்பாட்டுத்துறை அமைச்சர் சுவாதி சிங் பீர் பார் ஒன்றை திறந்து வைத்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பார் வாசலில் ரிப்பன் வெட்டி திறந்து வைக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கவனத்திற்கு சென்றுள்ளது.
மேலும் அமைச்சர் சுவாதி சிங் இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.