Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வயதான மாமியாரை அடித்து உதைக்கும் மருமகள் : அதிர்ச்சி வீடியோ

வயதான மாமியாரை அடித்து உதைக்கும் மருமகள் : அதிர்ச்சி வீடியோ
, செவ்வாய், 24 மே 2016 (14:07 IST)
80 வயதான தன்னுடைய மாமியாரை அவரது மருமகள் அடித்து உதைக்கும் வீடியோ வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.


 

 
டெல்லியில் வசிக்கும் அந்த வயதான மூதாட்டி ஒரு வீட்டின் பால்கனியில் அமர்ந்திருக்கிறார். அவரை அவரது மருமகள் உள்ளே வா என்று வலுக்கட்டாயமாக அவரின் கையை பிடித்து இழுக்கிறார். ஆனால் அந்த மூதாட்டியோ உள்ளே வர மறுத்து அங்கிருந்த கம்பியை பிடித்துக் கொண்டு உள்ளே செல்ல மறுக்கிறார். உள்ளே சென்றால் மருமகள் அவரை அடிப்பாரோ என்னவோ?..
 
இந்த நிகழ்ச்சியை எதிர்வீட்டில் இருக்கும் ஒரு பெண் தனது மொபைலில் படம் எடுத்துள்ளார். மேலும் வயதானவரை  ஏன் துன்புறுத்துகிறார்? உனக்கு வெட்கமாக இல்லையா என்று அவரிடம் அவர் கேட்க, அந்த பெண் அவரிடம் வாக்குவாதம் செய்யும் சம்பவமும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
 
அந்த வீடியோவை பார்த்து பலரும் அதிர்ச்சியைடந்துள்ளார்கள்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாம் திருந்த வேண்டும்; திமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போய் விட்டார்கள் - கருணாநிதி