தமிழக பாஜக தலைவர் எல் முருகன் ஒன்றிய அமைச்சர் என சொல்லி பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் எல் முருகன் அவர்கள் நேற்று மத்திய அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார் என்பதும் அவருக்கு இணை அமைச்சர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது என்றும் என்பதையும் பார்த்தோம். இந்நிலையில் அவருக்கு மீன்வளம், தகவல் மற்றும் ஒளிபரப்பு மற்றும் கால்நடை மற்றும் பால்வளம் ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பதவியேற்றுக்கொண்ட எல் முருகன் தனது பதவியேற்பில் ஒன்றியன் (யூனியன்) என சொல்லி பதவியேற்கும் வீடியோ வெளியாகியுள்ளது. ஆனால் தமிழகத்தில் சில மாதங்களாக சொல்லப்பட்டு வரும் ஒன்றிய அரசு என்ற பதத்துக்கு தமிழக பாஜகவினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.