Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் மாநிலங்களவைக்கு தேர்வாகிறார் எல்.முருகன்

Sinoj
புதன், 14 பிப்ரவரி 2024 (12:11 IST)
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மத்திய பிரதேசத்தில் இருந்து பாஜக சார்பில் மீண்டும் மாநிலங்களவை எம்.பி.,யாகிறார்.

நாடு முழுவதும் 15 மாநிலங்களில்,56 மாநிலங்களவை  உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைவதால், அந்த இடங்களுக்கான தேர்தல் வரும் 27 ஆம் தேதி நடக்கவுள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள், நாளையுடன் முடிவடையவுள்ளது.

இந்த நிலையில், ராஜ்யசபையின் (மாநிலங்களவை) 56 காலி இடங்களுக்கான தேர்தலுக்காக காங்கிரஸ், சமாஜ்வாதி ஆகிய கட்சிகள் தங்கள் கட்சி வேட்பாளர்களை அறிவித்து வரும் நிலையில், தேர்தலுக்கான போட்டியில் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியிட்டுள்ளது.

அதில், மத்திய தொழில்நுட்ப இணையமைச்சர் எல்.முருகன் மத்திய பிரதேசத்தில் இருந்து  மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்.முருகன் மக்களவை தேர்தலில் நீலகிரி தொகுதியில் போட்டியிடுவார் என தகவல் வெளியான நிலையில் பாஜக தலைமை இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய இணையமைச்சர் எல். முருகன், பாரத தேசத்திற்கான பாரத மக்களுக்கான சேவை செய்வதற்கு மீண்டும் ஒரு வாய்ப்பைபினை வழங்கிய பாரத பிரதமர்  நரேந்திரமோடி ஜி அவர்களுக்கும், தேசியத் தலைவர் திரு ஜே.பி. நட்டா அவர்களுக்கும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களுக்கும், மரியாதைக்குரிய பி.எல்.சந்தோஷ் அவர்களுக்கும்  நன்றிகளை  தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்ரேல் ஒரு போர் குற்றவாளி.. பிரதமர் நேதன்யாகுவிற்கு கைது வாரண்ட்!? - சர்வதேச நீதிமன்றம் அதிரடி!

ஈஷா மண் காப்போம் சார்பில் நெல்லையில் வாழை திருவிழா! - நவ 24-ஆம் தேதி நடைபெறுகிறது!

சென்னை சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை.. நாளை சிறப்பு முகாம்..!

விஸ்வநாதன் ஆனந்தின் மாமனாரிடம் மோசடி செய்ய முயற்சி.. சைபர் கிரைம் போலீசில் புகார்..!

17 ஆயிரம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments