உத்தர பிரதேசத்தில் கும்பமேளாவில் கூடியுள்ள மக்கள் ரயிலில் இடம் கிடைக்காததால் கலவரத்தில் இறங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசம் ப்ரயாக்ராஜில் திரிவேணி சங்கமத்தில் நடந்து வரும் கும்பமேளாவில் கலந்து கொள்ள நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தினசரி வரும் நிலையில் போதிய போக்குவரத்து வசதிகள் இல்லை என புகார் எழுந்துள்ளது. அடிக்கடி தீ விபத்துகளும், கூட்ட நெரிசலால் உயிரிழப்பும் ஏற்பட்டது.
இந்நிலையில் மக்கள் வெளியேற போதிய ரயில் வசதியும் இல்லாததால் மேலும் அமளியாகியுள்ளது. மதுபானி ரயில் நிலையத்தில் நின்றிருந்த ஸ்வதந்திர செனானி விரைவு ரயிலில் பக்தர்கள் பலர் ஏற முயன்ற நிலையில் இடம் இல்லாமல் நெரிசலில் சிக்கினர். இதனால் பலர் ஏசி கோச்சில் ஏற முயன்றனர். ஆனால் அது மூடியிருந்தது.
இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் வெளியேயிருந்து ஏசி கோச்சின் கண்ணாடிகளை அடித்து உடைத்துள்ளனர். இதனால் ஏசி கோச்சில் உள்ளே இருந்த பயணிகள் பீதியடைந்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Edit by Prasanth.K
कुंभ जाने वालों की भीड़ ने मधुबनी स्टेशन पर स्वतंत्रता सेनानी एक्सप्रेस के AC कोचेज के शीशे तोड़े
— Umashankar Singh उमाशंकर सिंह (@umashankarsingh) February 10, 2025
pic.twitter.com/3Ha679JG2z