ஜெய்ப்பூர் மாநிலத்தில் அருகில் உள்ள கிராமத்தில் 200 ஆண்டுகளுக்கு முன் ஒரு பெண்ணுக்காக ஊரை விட்டு கிராம மக்கள் வெளியேறியுள்ளனர். இன்று வரை அந்த கிராமத்தில் யாரும் வசிக்கவில்லை.
ஜெய்ப்பூர் மாநிலம் ஜெய்சலமருக்கு அருகில் உள்ள குல்தாரா என்ற கிராமத்தில் 200 ஆண்டுகளுக்கு முன் சுமார் 85 குடும்பங்கள் வாழ்ந்து வந்தனர். அப்போது நிதி அமைச்சராக இருந்த சலீம் சிங் என்பவர் அந்த கிராமத்தில் சென்று வரி வசூல் செய்து வந்துள்ளார். அவருக்கு அந்த கிராமத்தில் அதிக அளவு அதிகாரம் இருந்துள்ளது.
அவர் கிராமத்தின் தலைவருடைய பெண்ணின் மீது காதல் கொண்டு, திருமணம் செய்துக்கொள்ள பெண் கேட்டுள்ளாட். ஆனால் அவருக்கு பெண் கொடுக்க மறுத்துள்ளனர். இதில் ஆத்திரமடைந்த சலீம் சிங், எனக்கு பெண் கொடுக்கவில்லை என்றால் இந்த கிராமம் பெரும் விளைவுகளை சந்திக்கும் என மிரட்டியுள்ளார்.
இதனால் அச்சமடைந்து கிராம மக்கள் இரவோடு இரவாக ஊரை காலி செய்துவிட்டனர். பின் சிறிது நாட்கள் கடந்து மீண்டும் கிராமத்துக்கு வந்துள்ளனர். அப்போது ஊருக்குள் பயங்கரமான சத்தங்கள் கேட்டதாகவும், அமானுஷ்ய சக்திகள் இருப்பதாகவும் நினைத்து மீண்டும் ஊரை விட்டு சென்றுவிட்டனர். அதன்பிறகு தற்போது வரை யாரும் அந்த கிராமத்தில் வசிக்கவில்லை.
இந்நிலையில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள அந்த கிராமத்தை சுற்றுலா தளமாக மாற்றியுள்ளது ஜெய்ப்பூர் சுற்றுலாத்துறை.