Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தலித் சிந்தனை எழுத்தாளர் மர்ம கொலை. மகாராஷ்டிர மாநில மக்கள் அதிர்ச்சி

தலித் சிந்தனை எழுத்தாளர் மர்ம கொலை. மகாராஷ்டிர மாநில மக்கள் அதிர்ச்சி
, சனி, 4 மார்ச் 2017 (07:21 IST)
மகாராஷ்டிர மாநிலத்தில் தலித் எழுத்தாளரும் அம்பேத்கரிய சிந்தனையாளருமான கிருஷ்ணா கிர்வாலே மர்மான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் மகாராஷ்டிர மாநில மக்களிடம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

 

 



62 வயதான தலித் சிந்தனை எழுத்தாளர் டாக்டர் கிருஷ்ணா கிர்வாலே என்பவ்ர் கோலாப்பூர் சிவாஜி பல்கலைக் கழகத்தின் முன்னாள் பேராசிரியர். அவார் தனது எம்.எச்.ஏ.டி.ஏ காலனியில் அவரது இல்லத்தில் மர்மமான நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார் கிருஷ்ணா கிர்வாலே

இந்த கொலை குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறை கொலையாளிகளை பிடிக்க விசாரணையை முடுக்கி விட்டுள்ளது. ஆனால் இதுவரை கொலைக்கான காரணமோ, கொலையாளி குறித்த விவரங்கள்  தெரியவில்லை.

டாக்டர் அம்பேத்கர் ஆய்வு மற்றும் வளர்ச்சி மையத்தின் தலைவராக இருந்த கிருஷ்ணா, அம்பேத்கரின் சிந்தனைகளை பின்பற்றி தனது எழுத்திலும் அனல் பறக்க பதிவு செய்தவர். இவரது எழுத்துக்களில் அம்பேத்கரிய கருத்துகளும் தலித் எழுச்சி, சாதியத்தை அகற்றுதல் குறித்த தீப்பொறி பறக்கும் தகவல்களால் அந்த மாநிலத்தின் பிரபலமானவர்களில் ஒருவாராக இருந்தார்.

இவருடைய எழுத்தால் ஆத்திரமடைந்த ஒருசிலர் தான் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிமுகவை அழிக்க ஓ.பி.எஸ். செய்யும் சதி நிறைவேறாது. டிடிவி தினகரன்