Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒருவழியாக கர்நாடகா சென்றது கோதண்டராமர் சிலை!

Webdunia
புதன், 22 மே 2019 (09:19 IST)
திருவண்ணாமலை மாவட்டம் கொரக்கோட்டை என்ற பகுதியில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 64 அடி உயரம் கொண்ட பிரமாண்டமான கோதண்டராமர் சிலை கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகேயுள்ள ஈஜிபுரா என்ற இடத்திற்கு கொண்டு செல்வதற்காக கடந்த டிசம்பர் மாதம் 7-ந் தேதி ஒரு கண்டெய்னர் லாரியில் ஏற்றப்பட்டு புறப்பட்டது.
 
ஆனால் தமிழகத்தில் இருந்து கிளம்பி ஆறு மாதங்கள் ஆகியும் பல்வேறு தடைகள் காரணமாக கர்நாடக எல்லையை தொட முடியாத நிலையில் இந்த கண்டெய்னர் பல்வேறு சிக்கல்களை சந்தித்தது. இந்த நிலையில் பல்வேறு தடைகளை தாண்டி, கடந்த பிப்ரவரி மாதம் 8-ந் தேதி, கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே சாமல்பள்ளம் என்ற இடத்திற்கு வந்தது. அங்கிருந்து பெங்களூரு செல்லும் வழித்தடங்களில் உள்ள தரைப்பாலங்களை கடந்து செல்வதில் பிரச்சினை ஏற்பட்டதால் அதற்காக தனி மண்பாதை அமைக்கப்பட்டது.
 
கடைசியில் கர்நாடகவிற்குள் நுழைய தென்பெண்ணை ஆற்றை கடக்க வேண்டியிருந்ததால் அதற்கும் ஆற்றின் குறுக்கே மண்பாதை அமைக்கப்பட்டது. இதற்கும் ஒருசில தடைகள் வந்த நிலையில் ஒருவழியாக நேற்று இந்த ஆற்றை கோதண்டராமர் சிலையை சுமந்து சென்ற கண்டெய்னர் லாரி கடந்தது. இதனையடுத்து இன்று கர்நாடகா எல்லையான அத்திப்பள்ளிக்கு சென்ற கோதண்டராமர் சிலை இன்னும் சில மணி நேரத்தில் பெங்களூரு அருகேயுள்ள ஈஜிபுரா என்ற இடத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றும் அதன்பின்னர் ஒரு நல்ல நாளில் சிலை நிறுவப்படும் என்றும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments