Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

’கொடுமை’ - கார் ஏற்றிக்கொல்லப்பட்ட இளம்பெண் கவுன்சிலர்!

’கொடுமை’ - கார் ஏற்றிக்கொல்லப்பட்ட இளம்பெண் கவுன்சிலர்!
, வியாழன், 15 செப்டம்பர் 2016 (10:37 IST)
கேரள மாநிலம் கொல்லம் மாநகராட்சியின் கவுன்சிலராக இருப்பவர் கோகிலா எஸ் குமார்.

 
23 வயதாகும் இவர், பிஜேபி கட்சியை சேர்ந்தவர், இவரது தந்தை ஒரு தீயணைப்பு வீரர். இந்நிலையில் இவர்கள், சக்திக்குளங்காறா தர்மசாஸ்தா கோவிலில் நடந்த ஓணம் பண்டிகையில் கலந்துக்கொண்டு, இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிய போது, ஒரு கார் இவர்கள் வாகனத்தின் மீது மோதியது. இதில், இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இவர்களை மோதிய கார் நிக்காமல் சென்று விட்டது.

பின்னர், அங்கிருந்தவர்கள் உடனடியாக, இவர்களை சிகிச்சைகாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கோகிலாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே மரணமடைந்துவிட்டதாக அறிவித்தார். அவரது தந்தை மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இது ஒரு விபத்து என்று வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணைக்கு பிறகு இதை கொலை வழக்காக பதிவு செய்துள்ளனர்.
 
காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கோகிலாவை மர்ம நபர்கள் சிலர் ஒரு காரில் நீண்ட நாட்களாக பின் தொடர்ந்துள்ளனர். அவர்கள் தான் இந்த கொலையை செய்து இருக்க கூடும் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். மேலும் இது தொடர்பாக, காவல்துறையினர் தீவிர விசாரணை நடந்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜியோ வாடிக்கையாளர்களுக்கு வாய்ஸ் கால் சேவை மறுப்பு.. '52 கோடி' அழைப்புகளை துண்டித்த ஏர்டெல், ஐடியா, வோடபோன்..!