Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜியோ வாடிக்கையாளர்களுக்கு வாய்ஸ் கால் சேவை மறுப்பு.. '52 கோடி' அழைப்புகளை துண்டித்த ஏர்டெல், ஐடியா, வோடபோன்..!

ஜியோ வாடிக்கையாளர்களுக்கு வாய்ஸ் கால் சேவை மறுப்பு.. '52 கோடி' அழைப்புகளை துண்டித்த ஏர்டெல், ஐடியா, வோடபோன்..!
, வியாழன், 15 செப்டம்பர் 2016 (10:32 IST)
இந்திய டெலிகாம் சந்தையில் புதிதாகக் களமிறங்கியுள்ள ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களின் 52 கோடி வாய்ஸ் கால்-களை ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் துண்டித்துள்ளது. 

 
இதனால், ஜியோ வாடிக்கையாளர்கள் ஏர்டெல், வோடபோன், ஐடியா நிறுவனங்களின் டெலிகாம் சேவை பயன்படுத்துபவர்களை  தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வாய்ஸ் கால் இணைப்பிற்காக ஜியோ-விடம் கூடுதல் கட்டணங்கள் கோரிய ஏர்டெல் நிறுவனத்திற்கு டிராய் அமைப்பு மறுப்பு தெரிவித்தது. 
 
இந்தியாவில் முழுமையாக நெட்வொர்க் இல்லாமல் ரிலையன்ஸ் ஜியோ சேவை துவங்கப்பட்டது தவறாக இருந்தாலும், வாடிக்கையாளர்களுக்கு முழுமையான சேவையை டெலிகாம் நிறுவனங்கள் தங்களது வழங்க வேண்டும். ஆனால் லாப கணக்குகளைப் பாரத்து நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் ஜியோ வாடிக்கையாளர்களின் சுமார் 52 கோடி வாய்ஸ் கால்களை துண்டித்துள்ளது.
 
ஜியோவிடம் முழுமையான நெட்வொர்க் இல்லாத காரணத்தால் இரு வழி இணைப்பும் ஏர்டெல் மூலம் செய்யப்படுகிறது. ஜியோ சேவை அறிமுகம் செய்யப்பட்டுச் சில வாரங்கள் ஆன நிலையில், டெலிகாம் நிறுவனங்களின் கோரிக்கைக்கு டிராய் மறுப்பு தெரிவித்துள்ளது.
 
இதனால் ஏர்டெல், ஐடியா, வோடபோன் உட்பட அனைத்து நிறுவனங்களுக்கு டிராய் ஆணைக்கு இணங்க நிலையான சேவை அளிக்கும் வகையில் இண்டர்கனெக்ட் பாயின்ட் வழங்க முடிவு செய்துள்ளது.
 
கடந்த வாரம் மட்டும் ரிலையன்ஸ் ஜியோ வின் 100 வாய்ஸ் கால்களுக்கு 75 இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. மறுமுனையில் ஜியோ வாடிக்கையாளர்களுக்குப் பிற நெட்வொர்க் வாடிக்கையாளர் சராசரியாக ஒரு மணிநேரத்திற்கு 2 கால் செய்யப்படுவதாக ஆய்வுகள் கூறப்படுகிறது.
 
இந்த வார இறுதியில் பார்தி ஏர்டெல், வோடபோன் இந்தியா, ஐடியா செல்லூலார் ஆகிய நிறுவனங்கள் ஜியோ இன்போகாம் உடன் முக்கிய ஆலோசனையை நடத்த உள்ளது. 
டிராய் அமைப்பு மூலம் மிகப்பெரிய ஏமாற்றத்தைச் சந்தித்த டெலிகாம் நிறுவனங்கள் ஒரு கால் இணைப்பிற்கு 14 பைசா கூடுதல் கட்டணத்தை ஜியோவிடம் நேரடியாக வலியுறுத்த உள்ளது.
 
தற்போதைய நிலையில் இந்தியா முழுவதிலும் ஏர்டெல், வோடபோன், ஐடியா ஆகிய 3 நிறுவனங்களிடம் சுமார் 7,000 இண்டர்கனெக்டிங் பாயின்ட் உடனடி தேவையாக ஜியோ முன்வைக்க உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எம்ஜிஆர் உறவினர் கொலை வழக்கு! தீர்ப்பை எதிர்க்கும் கைதிகள்!