Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஊழலுக்கு எதிரான கமல் போராட்டம்: கிரண்பேடி ஆதரவு

, வியாழன், 20 ஜூலை 2017 (23:29 IST)
தமிழக ஆட்சியாளர்கள் செய்து வரும் ஊழலை தட்டி கேட்க வேண்டிய எதிர்க்கட்சிகள் பெயருக்கு கண்டனம் தெரிவித்துவிட்டு சட்டசபையில் இருந்து வெளியேறி வரும் நிலையில் தைரியமாக ஆட்சியாளர்கள் மீது அஸ்திரத்தை ஏவியவர் கமல்



 
 
இதனால் முதல்வர், அமைச்சர்கள் முதல் அனைத்து அரசியல்வாதிகளும் கலக்கத்தில் உள்ளனர். இந்த நிலையில் கமலின் ஊழல் எதிர்ப்புக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகிக்கொண்டே வருகிறது.
 
இந்த நிலையில் கமலின் ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கு புதுவை கவர்னரும் இந்தியாவின் முதல் ஐபிஎஸ் பெண் அதிகாரியுமான கிரண்பேடி ஆதரவு கொடுத்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் கூறியபோது, 'ஊழலுக்கு எதிராக யார் குரல் கொடுத்தாலும் ஆதரிக்க வேண்டும். கமல் உள்பட ஊழலுக்கு எதிராக யார் குரல் கொடுத்தாலும் அவர்களுக்கு என் முழு ஆதரவு உண்டு என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினி முதல்வர், கமல் துணை முதல்வர்: எஸ்.வி.சேகர் கருத்து