Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காய்ச்சலுக்கு வந்த இளைஞருக்கு கிட்னி பெயிலியர் டயாசிலிஸ் ... டாக்டர்களின் அலட்சியம்!

Advertiesment
காய்ச்சலுக்கு  வந்த இளைஞருக்கு கிட்னி  பெயிலியர் டயாசிலிஸ் ... டாக்டர்களின் அலட்சியம்!
, திங்கள், 15 ஜூலை 2019 (19:03 IST)
மகாராஷ்டிர மாநிலம் பிம்ப்ரி பகுதியில் வசித்துவருபவர் ஆனந்த் அனில்வால். இவர் சமீபத்தில் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 
அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டதாகக் கூறி டயாசிலிஸ் செய்துள்ளனர்.
 
ஆனால் இந்த இளம் வயதில் எப்படி கிட்லி பெயிலியர் ஆகும் ,என்று பல்வேறு கேள்விகளை அவரது குடும்பத்தினர் கேட்டுள்ளனர்.
 
இதனைத்தொடர்ந்து மருத்துவமனையில் இப்பிரச்சனை பூதாகரமாகவே அவரது குடும்பத்தினரும் பெரும் சந்தேகத்தை எழுப்பினர். இதுகுறித்து விசாரணை நடத்திய மருத்துவமனை, ஆனந்த்துக்கு தவறான சிகிச்சை அளிக்க நேரிட்டுவிட்டதை ஏற்றுக்கொண்டது.
 
வெறும் காய்ச்சலுக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆனந்த்துக்கு,, டயாசிலிஸ் சிகிச்சை அளித்து அவரை பலவீனமாக்கியதால் தற்போது, அந்த மருத்துவமனை மீது புகார் எழுப்பியுள்ளார். மேலும் இதுசம்பந்தமாக வழக்கு தொடரப்போவதாகவும் அவர் கூறியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின்றன.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எகிப்து மம்மிக்களை காண அரிய வாய்ப்பு: சுற்றுலா தளமான பிரமிட்!!