Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனுஷங்க போயிட்டாங்க, இனிமே நாமதான்! – யமுனைக்கு வந்த அபூர்வ முதலை!

Webdunia
திங்கள், 29 ஜூன் 2020 (11:25 IST)
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் மனிதர்கள் நடமாட்டம் குறைந்துள்ள நிலையில் பல காலமாக அழிந்து விட்டதாக நம்பப்பட்டிருந்த அபூர்வ உயிரினங்கள் வெளியே வர தொடங்கியுள்ளன.

உலகில் உள்ள எல்லா ஆறுகளிலும் இல்லாத சில அதிசயங்கள் கங்கை மற்றும் யமுனை ஆற்றில் உண்டு. சதுப்பு நில பிராணிகளான முதலைகளும், கடல் உயிரின வகையான நீர்நாய், டால்பின் போன்றவையும் ஒன்றாக வசித்து வரும் பகுதி கங்கை, யமுனை ஆறுகள். நன்னீர் வாழ்விற்கு ஏற்றார்போல அந்த உயிரினங்கள் சற்று வித்தியாசமாக இருக்கும்.

கங்கையில் புனித தலங்களால் ஏற்பட்ட அசுத்தத்தாலும், யமுனையில் தொழிற்சாலை கழிவுகளாலும் இந்த அரியவகை உயிரினங்கள் கிட்டதட்ட அழிந்து விட்டிருந்தன. முக்கியமாக யமுனையில் மட்டுமே காணப்படும் கூர்மூக்கு கொண்ட கரியல் முதலைகள் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இல்லாமல் போய்விட்டதாகவே நம்பப்பட்டது. மீன்களை மட்டுமே சாப்பிடும் இந்த முதலைகள் கடந்த 10 ஆண்டுகளாக மாயமாகி இருந்ததாக கூறப்படுகிறது. தற்போது ஊரடங்கால் தொழிற்சாலைகள் போன்றவை மூடப்பட்டிருப்பதால் நதிகள் தூய்மையடைந்துள்ளன.

இந்நிலையில் சமீப நாட்களாக அழிந்து விட்டதாக கருதப்பட்ட கூர்மூக்கு கரியல் முதலைகள் யமுனை நதியின் பல்வேறு பகுதிகளில் காணப்படுகின்றன. முதலைகள் நதியில் செல்வதை பலர் பார்த்து புகைப்படமெடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உதயநிதிக்கு உடல்நலமில்லை.. மகனுக்காக மானிய கோரிக்கையை முன்வைத்த முதல்வர்..!

ஆன்லைன் சூதாட்ட வழக்கு.. 15 மாதங்களாக விசாரணைக்கு வராமல் தடுக்கும் சக்தி எது? ராமதாஸ்

சென்னைக்கு வருகிறது ரஷ்ய போர்க்கப்பல்.. கூட்டு பயிற்சி பெற திட்டம் என தகவல்..!

வாட்ஸ்ஆப் சாட் மூலம் வரி ஏய்ப்பை கண்டுபிடிக்கிறோம்: நிர்மலா சீதாராமன் தகவல்..!

வானிலை முன்னறிவிப்பிலும் இந்தி திணிப்பு.. சு வெங்கடேசன் எம்பி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments