Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கேரள இளம்பெண் விஸ்மயா தற்கொலை! – கணவர் குற்றவாளி என தீர்ப்பு!

Advertiesment
Vismaya
, திங்கள், 23 மே 2022 (13:56 IST)
கேரளாவில் வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்ட விஸ்மயா வழக்கில் அவரது கணவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் கொல்லம் பகுதியை சேர்ந்த விஸ்மயா என்ற இளம்பெண்ணுக்கும், கிரண் குமார் என்ற நபருக்கும் கடந்த ஆண்டில் திருமணம் நடந்தது. இந்நிலையில் கிரண் குமார் வரதட்சணை கேட்டு விஸ்மயாவை துன்புறுத்தியதால் கடந்த ஆண்டு ஜூன் 21 அன்று விஸ்மயா தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் வரதட்சணை கொடுமை குறித்த பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து பல்வேறு வரதட்சணை கொடுமை வழக்குகளும் வெளிச்சத்திற்கு வந்தன.

இன்று கேரள நீதிமன்றத்தில் விஸ்மயா வழக்கு விசாரணைக்கு வந்தது. அதில் விஸ்மயா தற்கொலைக்கு காரணமான அவரது கிரண் குமார் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளது. கிரண்குமாருக்கு வழங்கப்படும் தண்டனை குறித்து விரைவில் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இனி பறந்து வரும் கூரியர்! மதுரையில் ட்ரோன் மூலம் கூரியர் சர்வீஸ்!