புகாரளிக்க சென்ற சிறுமி போலீஸால் வன்கொடுமை? – கேரளாவில் அதிர்ச்சி!

Webdunia
ஞாயிறு, 13 நவம்பர் 2022 (16:00 IST)
கேரளாவில் வன்கொடுமை தொடர்பாக புகாரளிக்க சென்ற சிறுமி போலீஸால் பாலியல் தொல்லைக்கு உள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் அம்பலவயல் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவரை கடந்த மாதத்தில் ஒரு கும்பல் கடத்தி சென்று ஊட்டியில் உள்ள லாட்ஜ் ஒன்றில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த சிறுமி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் மற்றும் ஒரு பெண் கான்ஸ்டபிள் மூன்று பேர் வந்து விசாரணை நடத்துவதற்காக ஊட்டி செல்ல வேண்டும் என்று அழைத்து சென்றுள்ளனர்.

ஊட்டியில் இருந்த லாட்ஜில் விசாரணை மேற்கொண்ட நிலையில் திரும்ப சிறுமியை அழைத்து வந்தபோது சிறுமிக்கு சப் இன்ஸ்பெக்டர் பாலியல் தொந்தரவு அளித்ததோடு, சிறுமியை படம் பிடித்துக் கொண்டு வெளியே சொல்லக்கூடாது எனவும் மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து சிறுமி டி.ஐ.ஜியிடம் புகார் அளித்துள்ளார், அதன்பேரில் எடுக்கப்பட்ட நடவடிக்கையில் சப் இன்ஸ்பெக்டர் பாபு சஸ்பெண்ட் செய்யப்பட்டதுடன், அவர் மீது போக்சோ சட்டத்திலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருடன் சென்ற மற்ற காவலர்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடந்த ஆண்டை விட கிட்டத்தட்ட இருமடங்கு உயர்வு.. தீபாவளி டாஸ்மாக் விற்பனை எத்தனை கோடி?

என் தந்தை என் மனைவியை திருமணம் செய்து கொண்டார்.. மரணத்திற்கு முன் இளைஞர் வெளியிட்ட வீடியோவால் அதிர்ச்சி..!

சொந்த கட்சி வேட்பாளருக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் தேஜஸ்வி யாதவ்! என்ன காரணம்?

வங்கக்கடலில் புயல் உருவாகுமா? வானிலை ஆய்வு மையத் தலைவர் அமுதா சொன்ன அப்டேட்

தீபாவளி முகூர்த்த பங்குச்சந்தை வர்த்தகம்.. சென்செக்ஸ், நிஃப்டியில் ஏற்றமா?

அடுத்த கட்டுரையில்