Webdunia - Bharat's app for daily news and videos

Install App

33 ஆயிரத்தை நெருங்கியது கேரளாவின் ஒருநாள் தொற்று எண்ணிக்கை!

Webdunia
வெள்ளி, 27 ஆகஸ்ட் 2021 (20:18 IST)
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் மட்டும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
இந்த நிலையில் கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்தை நெருங்கி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32,801 என்றும் கொரோனாவால் குணமானவர்களின் எண்ணிக்கை 18,573 என்றும் கேரள அரசின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஒரே நாளில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 179 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் கேரளாவில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 1,95,254 என்றும் கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 20,313 என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமானவர்களின் மொத்த எண்ணிக்கை 37,30,198 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் இன்று ஒரே நாளில் கேரளாவில் கொரோனா பரிசோதனை செய்தவர்களின் எண்ணிக்கை 1,70,703  என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments