Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Wednesday, 16 April 2025
webdunia

10 ஆயிரத்திற்கு பாம்புகள்! - மனைவியை கொல்ல ஸ்கெட்ச் போட்ட கணவன்!

Advertiesment
National
, திங்கள், 25 மே 2020 (08:58 IST)
கேரளாவில் 10 ஆயிரம் ரூபாய்க்கு பாம்புகளை வாங்கி கணவனே மனைவியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொல்லம் அருகே உள்ள அனச்சல் பகுதியை சேர்ந்தவர் சூரஜ். இவருக்கு சில வருடங்களுக்கு முன்பு உத்ரா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதத்தில் உத்ராவை விஷப்பாம்பு ஒன்று கடித்துள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தீவிர சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைத்துள்ளார்.

அதற்கு பிறகு சில வாரங்களுக்கு முன்பு வீட்டில் தூங்கி கொண்டிருந்தவரை பாம்பு கடித்துள்ளது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. உத்ராவை கொல்ல அவரது கணவர் சூரஜ் பாம்புகளை வாங்கியது தெரிய வந்துள்ளது. முதலில் பிப்ரவரி மாதம் 5 ஆயிரத்திற்கு விஷ பாம்பு ஒன்றை வாங்கியுள்ளார். அதிலிருந்து உத்ரா தப்பித்த நிலையில் மீண்டும் 5 ஆயிரத்திற்கு ஒரு விஷ பாம்பை வாங்கி தூக்கி கொண்டிருந்த உத்ராவை கடிக்க செய்துள்ளார். மனைவியின் நகைகளை அபகரிக்க அவர் இவ்வாறு செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் சூரஜ் மற்றும் அவருக்கு பாம்பு விற்ற சுரேஷ் என்பவரையும் கைது செய்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரசியல் பண்ண நாங்களும் ரெடி!- முன்னாள் திமுக ஆலோசகரை பிடித்த அதிமுக!