Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரெட் அலர்ட்... கேரளத்தில் மோசமான மழை!

Webdunia
செவ்வாய், 2 ஆகஸ்ட் 2022 (11:32 IST)
கேரளாவில் அடுத்த 3 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது.


இந்தியாவில் கடந்த சில மாதங்களாக தென்மேற்கு பருவமழை காரணமாக பல பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தற்போது வங்க கடலில் தென் – மத்திய வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த சுழற்சி உருவாகியுள்ளதால் தென் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கேரளாவில் அடுத்த 3 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று கூறியுள்ளது. மேலும் திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம் மற்றும் இடுக்கி ஆகிய 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.

கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், மாநிலத்தின் சில பகுதிகளில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த 2 நாட்களில் பெய்த மழைக்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உள்பட 6 பேர் பலியானார்கள்.

இதுபோல மாநிலம் முழுவதும் மழைக்கு 55 வீடுகள் சேதமடைந்துள்ளது. இதில் 5 வீடுகள் முழுமையாகவும், 50 வீடுகள் பகுதி அளவிலும் சேதம் அடைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரிவினையைத் தூண்டும் வகையில் நவாஸ் கனி செயல்படுகிறார். அண்ணாமலை குற்றச்சாட்டு..

விவேக் ராமசாமி சதி செய்து விரட்டப்பட்டாரா? எலான் பார்த்த உள்ளடி வேலையா?

சீக்கிரமே துணை முதல்வர் உதயநிதி ஜெயிலுக்கு போவார்: எச். ராஜா

ஓடும் ரயிலில் தீப்பிடித்ததாக வதந்தி.. பரிதாபமாக பலியான 8 பயணிகள்..!

2வது மாடியில் இருந்து கீழே விழுந்த கார்.. ரிவர்ஸ் கியர் போடும்போது விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments