Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சபரிமலைக்கு மனித சுவர் அறிவித்த பினராயி விஜயன் – பாஜக ஆத்திரம்

சபரிமலைக்கு மனித சுவர் அறிவித்த பினராயி விஜயன் – பாஜக ஆத்திரம்
, செவ்வாய், 4 டிசம்பர் 2018 (15:45 IST)
சபரிமலைக்குள் பெண்களை அனுமதிக்கும் தீர்ப்புக்கு ஆதரவாக 640 கி.மீ. தூரத்துக்கு பெண்களைக் கொண்டு சுவர் அமைக்க கேரள அரசு முடிவெடுத்துள்ளது.

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடைக்கு எதிராக உச்சநீதிமன்றம் கடந்த அக்டோபர் மாதம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை நிறைவேற்ற பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. எனினும் தீர்ப்பை எதிர்த்துக் கேரளத்தில் பாஜக, காங்கிரஸ் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இரண்டு முறை நடைதிறக்கப்பட்டும் இன்னும் பெண்பக்தர்களால் கோயிலுக்குள் செல்ல முடியவில்லை.

இதை முன்னிட்டு கேரள அரசு, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு ஆதரவாக பெண்களைக் கொண்டே மனித சுவர் அமைக்க உள்ளதாக கடந்த சனிக்கிழமை அன்று அறிவித்தது. ''வரும் ஜனவரி 1-ம் தேதி, காசர்கோடில் இருந்து திருவனந்தபுரம் வரை 600 கி.மீ. தூரத்துக்கு இந்தப் பெண்கள் சுவர் அமைக்கப்படும்'' என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்திருந்தார்.

இதனால் அதிர்ச்சியுற்ற பாஜக இப்போது இந்த முடிவுக்கு எதிராக எதிர்வினையாற்றியுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள பாஜக நிர்வாகி ‘கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் அமைக்கும் சுவர்களை, பக்தர்களே இடித்துத் தள்ளுவர். இந்த நாத்திகர்களின் சுவருக்கு பெண் பக்தர்கள் ஆதரவு தர மாட்டார்கள்’. எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’சென்னை நிருபர் ’ தாக்குதல்! திமுக ஸ்டாலின் மறுப்பு : உண்மை நிலவரம் என்ன...