Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுமியை கடித்துக் கொன்ற தெரு நாய்கள்! – கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்!

Webdunia
புதன், 7 செப்டம்பர் 2022 (10:30 IST)
கேரளாவில் பால் வாங்க சென்ற சிறுமியை தெரு நாய்கள் கடித்ததால் சிறுமி இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் உள்ள மயிலபுறம் பகுதியை சேர்ந்த சிறுமி அபிராமி. 12 வயதான சிறுமி அபிராமி சமீபத்தில் தனது வீட்டின் அருகே உள்ள கடைக்கு பால் வாங்க சென்றுள்ளார்.

அப்போது அங்கு திரிந்த தெரு நாய்கள் சில திடீரென அபிராமி மீது பாய்ந்து கடித்ததில் அவரது கை, கால்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அபிராமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமை அபிராமிக்கு உடல்நிலை மோசமானதால் வெண்டிலேட்டர் உதவியுடன் கோட்டயம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கொண்டு சென்றுள்ளனர். ஆனால் சிறுமி அபிராமி அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தெரு நாய்கள் கடித்து சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தெரு நாய்கள் அதிகளவில் பெருகி வருவதை குறைக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகள் தூக்கில் தொங்கி தற்கொலை.. அதிர்ச்சியில் அம்மாவும் தூக்கு போட்டு தற்கொலை.. சோக சம்பவம்..!

கருணாநிதி சிலை மீது கருப்பு பெயிண்ட் வீச்சு.. சேலம் அருகே பரபரப்பு..!

நல்லவேளை இந்த அறிவுக்கொழுந்துகள் காமராஜர் காலத்தில் இல்லை!? - எடப்பாடியாரை கலாய்த்த மு.க.ஸ்டாலின்!

காலன் அழைக்கும் வரை கால்கல் ஓயவில்லை! 114 வயதான மாரத்தான் வீரர் சாலை விபத்தில் பலி!

விமானி அறைக்குள் நுழைய முயன்ற 2 பயணிகள்.. டெல்லி - மும்பை விமானத்தில் 7 மணி நேரம் என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments