ஆன்லைனில் மதுவிற்பனை: முதல்வர் அதிரடி திட்டம்

Webdunia
செவ்வாய், 31 மார்ச் 2020 (09:46 IST)
இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதன் காரணமாக அனைத்து கடைகளும் மூடப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் மது பழக்கம் அதிகம் உள்ள கேரளாவில் குடிமகன்களின் திண்டாட்டத்தில் உள்ளனர். இதனால் மது கிடைக்காத விரக்தியில் பலர் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது
 
இதனை அடுத்து மருத்துவரின் பரிந்துரையின் பேரில் ஒரு சிலருக்கு மட்டும் மதுபானம் வழங்கப்படும் என முதல்வர் நேற்று அறிவித்து இருந்தார். ஆனால் இந்த அறிவிப்புக்கு மருத்துவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மதுபானங்களை பரிந்துரை செய்ய மருத்துவர்களுக்கு விருப்பமில்லை என்றும் அவ்வாறு பரிந்துரை செய்யப்படும் மருத்துவர்களுக்கு எதிர்காலத்தில் பிரச்சனை ஏற்படலாம் என்றும் மருத்துவர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது 
 
இதனை அடுத்து கேரள முதலமைச்சர் அதிரடியாக ஆன்லைனில் மதுவகைகள் விற்க திட்டமிட்டுள்ளதாகவும், இதுகுறித்த நடைமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வரும்வரை ஆன்லைனில் தேவைப்படுபவர்கள் மதுபானங்களை வாங்கி கொள்ளலாம் என்றும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் கேரள மாநில தலைமைச்செயலக வட்டாரங்கள் கூறுகின்றன

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இம்ரான் கானை அரசியல் கைதியாக ஏற்கிறதா இந்தியா? பாகிஸ்தான் ஊடகம் பரப்பிய தகவல்..!

திருப்பரங்குன்றம் மலை தீபம் சர்ச்சை: தர்கா அருகே தீபம் ஏற்றும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு!

விஜயின் ரோட் ஷோவுக்கு புதுச்சேரி காவல்துறை அனுமதி மறுப்பு!...

20 நிமிடங்களில் முறிந்த திருமணம்: மணமகள் மறுத்ததால் ஊர் பஞ்சாயத்தில் விவாகரத்து!

பாஜக வேட்பாளராக போட்டியிடும் சோனியா காந்தி.. தமிழில் அடித்த போஸ்டரால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments