கேரளாவில் ஷாப்பிங் மால்களில் பார்க்கிங் கட்டணம் வசூலிப்பதற்கு நீதிமன்றம் ஆட்சேபணை தெரிவித்துள்ளது.
கேரளா எர்ணாகுளத்தில் உள்ள லுலு ஷாப்பிங் மாலில் காரை நிறுத்துவதற்கு பார்க்கிங் கட்டணம் வசூலித்தது தொடர்பாக வாடிக்கையாளருக்கும், ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஷாப்பிங் மால்கள் கட்டப்படும்போது ஏற்படுத்த வேண்டிய அவசிய வசதிகளில் கழிவறை, பார்க்கிங் வசதிகளும் அடக்கம் எனும்போது பார்க்கிங்கிற்கு தனியாக கட்டணம் வசூலிப்பது முறையற்றதாக உள்ளதாக கருத்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து விளக்கம் அளிக்க கோரி களமசேரி நகராட்சிக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்துள்ளது.