Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

500,1000 ரூபாய் நோட்டுகளை பதுக்குவது தண்டனைக்குரிய குற்றம் - மத்திய அரசு அதிரடி

500,1000 ரூபாய் நோட்டுகளை பதுக்குவது தண்டனைக்குரிய குற்றம் - மத்திய அரசு அதிரடி

Advertiesment
Black money
, புதன், 16 நவம்பர் 2016 (16:30 IST)
பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை, வங்கிகளில் மாற்றாமல் வைத்திருப்பது, தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படும் சட்டத்தை மத்திய அரசு அமுல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


 

 
மக்களிடம் அதிகமாக புழங்கும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த 8ம் தேதி இரவு திடீரென, பிரதமர் மோடி அறிவித்தார். இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
மேலும், பழைய நோட்டுகளை டிசம்பர் 30ம் தேதிக்குள், வங்கிகளுக்கு சென்று பொதுமக்கள் மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, மக்கள் வங்கிகள் மற்றும் ஏ.டி.எம் மையங்களை நோக்கி படையெடுத்து வருகிறார்கள். 
 
இந்நிலையில், பழைய நோட்டுகளை, வருகிற ஏப்ரல் 1ம் தேதிக்கு பின், வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படும் என அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த தகவலை மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி, உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்த பொங்கலுக்கும் ஜல்லிக்கட்டு இல்லை: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு