Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ் வேட்பாளர்களை தன்பக்கம் இழுக்க கேசிஆர் முயற்சி? – கர்நாடகா துணை முதல்வர் பகீர் குற்றச்சாட்டு!

Webdunia
ஞாயிறு, 3 டிசம்பர் 2023 (12:08 IST)
தெலுங்கானாவில் காங்கிரஸ் வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வரும் நிலையில் அவர்களை ஈர்க்க சந்திரசேகர் ராவ் முயல்வதாக கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.



மத்திய பிரதேசம், தெலுங்கானா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு நடந்த சட்டமன்ற தேர்தலில் 4 மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது. இதில் தெலுங்கானாவில் ஆரம்பம் முதலே காங்கிரஸின் கை ஓங்கியுள்ளது. தெலுங்கானாவில் ஆளும் சந்திரசேகர் ராவின் பி.ஆர்.எஸ் கட்சியை வீழ்த்தி பல இடங்களில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வரும் நிலையில் தனிப்பெரும்பான்மையில் வெற்றி பெரும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் வருகிற டிசம்பர் 9ம் தேதி தெலுங்கானாவின் புதிய முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும் என தெலுங்கானா காங்கிரஸ் மாநில தலைவர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார். நாளை சந்திரசேகர் ராவ் தலைமையிலான அமைச்சரவை ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளது.

இந்நிலையில் சந்திரசேகர் ராவ் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர்களை தன்பக்கம் இழுக்க முயற்சிகள் மேற்கொள்வதாக கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். இதனால் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர்கள் தனியாக நட்சத்திர விடுதியில் தங்கவைக்க படலாம் என்றும் பேசிக் கொள்ளப்படுகிறது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments