Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிஆர்பிஎப் சாவடியில் குண்டு வீசிய பெண்! – ஜம்மு காஷ்மீரில் அதிர்ச்சி!

Advertiesment
சிஆர்பிஎப் சாவடியில் குண்டு வீசிய பெண்! – ஜம்மு காஷ்மீரில் அதிர்ச்சி!
, புதன், 30 மார்ச் 2022 (10:46 IST)
ஜம்மு காஷ்மீரில் சிஆர்பிஎப் சோதனை சாவடியில் பெண் ஒருவர் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் யூனியன் பிரதேசமாக இணைக்கப்பட்டது முதலாக அங்குள்ள பல்வேறு தரப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். காஷ்மீரில் பயங்கரவாத சம்பவங்கள் நிகழ்வதை தடுக்க துணை ராணுவத்தினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று காஷ்மீரின் சோபோர் பகுதியில் உள்ள சிஆர்பிஎப் படையின் சோதனை பாதுகாப்பு சாவடி அருகே புர்கா அணிந்து வந்த பெண் ஒருவர் திடீரென வெடிகுண்டை கொளுத்தி சோதனை சாவடி மீது வீசிவிட்டு தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் சாவடி சேதமடைந்தாலும் உயிரிழப்புகள் ஏதும் இல்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த வீடியோவை சிஆர்பிஎப் வெளியிட்ட நிலையில் வைரலாகி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இலங்கைத் தமிழர்கள் இந்தியாவுக்கு அகதிகளாக வருவது தொடருமா? – கள ஆய்வு