Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தியா தோற்றதை கொண்டாடிய காஷ்மீர் மாணவர்கள்! – வழக்குபதிவு செய்த காவல்துறை!

Advertiesment
இந்தியா தோற்றதை கொண்டாடிய காஷ்மீர் மாணவர்கள்! – வழக்குபதிவு செய்த காவல்துறை!
, செவ்வாய், 26 அக்டோபர் 2021 (12:44 IST)
உலக கோப்பை டி20 போட்டியில் பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வி அடைந்ததை கொண்டாடிய மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

உலகக்கோப்பை டி20 போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொண்டன. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இரண்டாவதாக களம் இறங்கிய பாகிஸ்தான் விக்கெட்டே இழக்காமல் 152 ரன்களை குவித்து வெற்றி பெற்றது.

இந்நிலையில் காஷ்மீரில் மருத்துவக்கல்லூரி விடுதியில் கிரிக்கெட் பார்த்த மாணவர்கள் பாகிஸ்தான் வெற்றி பெற்றதை கொண்டாடியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்நிலையில் அந்த மருத்துவ கல்லூரி மாணவர்கள் சிலர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயலலிதா மரணம்.. எங்களையே கேள்வி கேக்குறாங்க! – அப்போல்லோ மருத்துவமனை புகார்!