முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் அவர்களின் மகனும் தற்போதைய எம்பியுமான கார்த்தி சிதம்பரத்தின் ரூ.11.04 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது பரபரப்பு ஏற்படுத்தியது.
ஐஎன்எக்ஸ் மீடியா தொடர்பான வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் கர்நாடக மாநிலத்தில் உள்ள கூர்க் என்ற மாவட்டத்தில் உள்ள ரூ.11.04 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.
சட்ட விரோத பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் மூன்று அசையும் சொத்துக்கள் மற்றும் ஒரு அசையா சொத்துக்களை முடக்கி உள்ளதாகவும் இந்த சொத்துக்களை மதிப்பு ரூ.11.04 கோடி என்றும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் எம்பி ஆன கார்த்தி சிதம்பரத்தின் ரூ.11.04 கோடி சொத்துக்கள் அமலாக்கத்துறை அதிகாரிகளால் முடக்கப்பட்டிருப்பது இந்திய அரசியலில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது