கர்நாடகாவில் கிராமம் ஒன்றிலிருந்து துரத்தப்பட்ட குரங்கு ஒன்று 22 கி.மீ பயணித்து மீண்டும் கிராமத்திற்கு வந்து அட்டகாசம் செய்த சம்பவம் வைரலாகியுள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் கொட்டிகெஹரா என்ற கிராமத்தில் குரங்கு ஒன்று நீண்ட நாட்களாக அட்டகாசம் செய்து வந்துள்ளது. இதுகுறித்து கிராம மக்கள் வனத்துறையிடம் புகார் அளித்து வந்த நிலையில் குரங்கை பிடித்த வனத்துறை அதிகாரிகள், அதை 22 கி.மீ தூரத்திற்கு அப்பால் உள்ள காட்டுப்பகுதியில் விட்டு வந்துள்ளனர்.
ஆனால் 22 கி.மீ தூரம் மீண்டும் நெடும்பயணம் மேற்கொண்ட அந்த குரங்கு சரியாக மீண்டும் கொட்டிகெஹரா கிராமத்தை வந்தடைந்துள்ளது. மீண்டும் அங்குள்ள மக்களை அது தாக்கவே அதை பிடித்த வன அதிகாரிகள் மீண்டும் குரங்கு கிராமத்திற்கு வந்துவிடாதபடி அடர்ந்த கானகத்திற்குள் அதை விட்டு வந்துள்ளனர்.