முட்டை சாப்பிட மாட்டோம்.. டிசி கேட்டு பயமுறுத்தும் 80 மாணவர்கள்.. பள்ளியில் பரபரப்பு..!

Mahendran
வியாழன், 24 ஜூலை 2025 (13:16 IST)
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராம பள்ளியில், மதிய உணவுடன் முட்டை வழங்கப்பட்டதால், 80 மாணவர்கள் பள்ளியை விட்டு வெளியேற போவதாக மிரட்டி போராட்டம் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கர்நாடக மாநில அரசு சமீபத்தில் பள்ளிகளில் மதிய உணவுடன் முட்டை வழங்க ஏற்பாடு செய்திருந்தது. ஆனால், மாண்டியா மாவட்டத்திற்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். "பல ஆண்டுகளாக நாங்கள் இறைச்சி மற்றும் முட்டையை சாப்பிடுவதில்லை. முட்டையை உணவாகத் தந்தால், நாங்கள் TC வாங்கிக்கொண்டு பள்ளியிலிருந்து வெளியேறுவோம்" என்று 80 மாணவர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
இந்த போராட்டத்தை கண்ட பள்ளியின் தலைமை ஆசிரியர், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். "இது அரசின் கொள்கை. ஒரு மாணவர் முட்டையை கேட்டால் கூட நாங்கள் அதைக் கொடுக்க வேண்டும். நீங்கள் முட்டைக்கு தரும் முக்கியத்துவத்தை, குழந்தைகளின் கல்விக்கு தாருங்கள்" என்று அவர் அறிவுறுத்தினார்.
 
இருப்பினும், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளனர். "முட்டையைச் சாப்பிட வற்புறுத்தக் கூடாது. மீறினால் எங்களுக்கு டிசி கொடுத்துவிடுங்கள், நாங்கள் வேறு பள்ளியில் சேர்ந்து கொள்கிறோம்" என்று அவர்கள் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இலங்கையில் கனமழை, பெருவெள்ளம்.. கிரிக்கெட் மைதானத்தில் தஞ்சமடைந்த பொதுமக்கள்..!

நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா, ராகுல் காந்தி மீது 420 பிரிவில் வழக்குப்பதிவு..!

யாருடைய உதவியும் இல்லாமல் ரோபோ டீச்சரை உருவாக்கிய அரசு பள்ளி மாணவர்.. ஆச்சரிய தகவல்..!

உதய நிதிக்கு வாழ்க்கை கொடுத்ததே விஜய்தானா? இவரு என்ன புது மேட்டர வலைப்பேச்சு பிஸ்மி கிளப்புறாரு

டிட்வா புயல் எதிரொலி.. சென்னை எழிலகத்தில் பேரிடர் கட்டுப்பாட்டு மையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments