Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொதுமக்களுக்கு மதுபானம் விருந்து வைத்த பாஜக எம்பி.. கர்நாடகாவில் பரபரப்பு..!

Siva
திங்கள், 8 ஜூலை 2024 (14:39 IST)
சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக எம்பி ஒருவர் பொதுமக்களுக்கு மதுபான விருந்து வைத்ததாக கூறப்படுவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 
 
சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை தனித்து பெரும்பான்மை பெறவில்லை என்றாலும் கூட்டணி கட்சியுடன் மீண்டும் ஆட்சி அமைத்தது என்பதும் மூன்றாவது முறையாக பிரதமராக மோடி பதவி ஏற்றார் என்பது தெரிந்தது. 
 
இந்த நிலையில் இந்த தேர்தலில் வெற்றி பெற்ற எம்பிக்கள் அனைவரும் தங்கள் தொகுதிக்கு நேரடியாக சென்று நன்றி தெரிவிக்கும் கூட்டம் மட்டுமே நடத்தி வரும் நிலையில் கர்நாடகாவில் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக எம்.பி. சார்பில் பொதுமக்களுக்கு மதுபானம் விருந்து வழங்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
கர்நாடகாவில் உள்ள சிக்பல்லாபூர் தொகுதியில் வென்ற பாஜக எம்.பி. சுதாகர் சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் மது வழங்குவதை அறிந்து பல்லாயிரக்கணக்கானோர் குவிந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகவும், அதன்பின் மிகப்பெரிய மைதானத்தில் போலீஸ் பாதுகாப்போடு, மக்களை வரிசையில் நிற்க வைத்து மது விநியோகம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புலியின் சிறுநீரில் மருத்துவ குணம்.. முடக்கு வாதத்தை குணமாக்கும் என கூறி விற்பனை..!

மன்னிப்பு கேட்ட கல்லூரி மாணவிக்கு முத்தம் கொடுத்த இளைஞர்.. கைது செய்து சிறையில் அடைத்த போலீஸ்..!

மோடியும் கெஜ்ரிவாலும் இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவர்கள்.. ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

பயணிகள் விமானம் - ராணுவ பயிற்சி ஹெலிகாப்டர் நேருக்கு நேர் மோதல்.. அமெரிக்காவில் அதிர்ச்சி..!

உணவுப் பொருட்களில் பூச்சிக்கொல்லி இருப்பதாக பொய் தகவல்! - மயில் மார்க் நிறுவனத்தினர் போலீஸில் புகார்!

அடுத்த கட்டுரையில்
Show comments