Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வண்டியெல்லாம் வர கூடாது; நடந்து போங்க! – கர்நாடகா அரசு உத்தரவு

வண்டியெல்லாம் வர கூடாது; நடந்து போங்க! – கர்நாடகா அரசு உத்தரவு
, புதன், 1 ஏப்ரல் 2020 (10:52 IST)
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும் பலர் அதை பொருட்படுத்தாமல் சாலைகளில் சுற்றுவதால் கர்நாடக அரசு புதிய விதிமுறையை அறிவித்துள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநில எல்லைகள் மூடப்பட்டுள்ளதுடன் மக்கள் அவசியம் இன்றி வெளியே செல்ல வேண்டாம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆனாலும் மக்கள் தொடர்ந்து சாலைகளில் பயணித்தப்படியே உள்ளனர். பல இடங்களில் போக்குவரத்து காவலர்கள் மக்களிடம் மிகவும் மரியாதையாக வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தி வருகின்றனர். சில இடங்களில் போலீஸார் அத்துமீறி வெளியே சுற்றுபவர்களை நூதனமான முறைகளில் தண்டனை அளித்து வருகின்றனர். சில இடங்களில் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.

கர்நாடகாவில் ஊரடங்கு அறிவித்துள்ள போதிலும் மக்கள் தொடர்ந்து வாகனங்களில் பயணித்துக் கொண்டே இருக்கின்றனர். இதை தடுக்கும் பொருட்டு கர்நாடக அரசு புதிய உத்தரவை அமல்படுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அதன்படி, அத்தியாவசிய பொருட்கள் வாங்க வரும் மக்கள் வாகனங்களில் வர கூடாது, நடந்துதான் வர வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அதை மீறி வாகனங்களில் வந்தால் அவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா வைரஸ்: சீனாவின் ஓர் உயிரி ஆயுதத் திட்டமா?